நுகர்வோர் நலத்துறை, அதன் அலுவலகங்களுடன் இணைந்து, தூய்மையை முன்னெடுக்கவும், அரசு அலுவலகங்களில் பணியிட அனுபவங்களை உயர்த்துவதற்கும் சிறப்புத் தூய்மை இயக்கம் 3.0-ஐக் கடைப்பிடித்து வருகிறது.
செப்டம்பர் 27, அன்று, நலத்துறையின் செயலாளர் திரு ரோஹித் குமார் சிங், கிரிஷி பவனில் உள்ள பிரிவுகளுக்குச் சென்று சிறப்புத் தூய்மை இயக்கம் 3.0 க்கான துறை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
நுகர்வோர் நலத்துறையைப் பொறுத்தவரை, பல்வேறு பிரிவுகளின் கீழ் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, சுத்தம் செய்வதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. சிறப்புத் தூய்மை இயக்கம் 3.0 கீழ் 150 இடங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
994 பொதுமக்கள் குறைகள் மற்றும் 1496 பொதுமக்கள் குறைகேட்பு மனுக்கள் மற்றும் 1922 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு அலுவலக வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய இத்துறை முடிவு செய்துள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா