இந்தியா-பிரான்ஸ் ராணுவ துணைக் குழுவின் 21-வது கூட்டம் தில்லியில் நடைபெற்றது .

இந்தியா-பிரான்ஸ் ராணுவ துணைக் குழுவின் 21-வது  கூட்டம் 2023 அக்டோபர் 16-17 தேதிகளில், புதுதில்லியில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, இந்தியத் தரப்பில்  ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் தலைமையகத்தின் துணைத்தலைவரும், விமானப்படை துணைத் தளபதியுமான வைஸ் மார்ஷல் ஆஷிஷ் வோரா, பிரான்ஸ் தரப்பில் கூட்டுப்படையின் சர்வதேச ராணுவ தொடர்பு பொது அதிகாரி மேஜர் ஜெனரல் எரிக் பெல்டியர் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர்.

இந்தியா-பிரான்ஸ் ராணுவத் துணைக்குழு என்பது ஒருங்கிணைந்த பாதுகாப்புப்படையின் தலைமையகம் மற்றும் பிரான்ஸ் ராணுவத்தின் கூட்டுப்படை தலைமையகத்தின் இடையேயான திட்டமிடல், செயல்பாட்டு நிலையிலான வழக்கமான பேச்சு வார்த்தைகள் மூலம்  இரு நாடுகளுக்கு இடையே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை செயல்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும்.

நட்புறவு மற்றும்  ஆக்கப்பூர்வமான சுமூகச் சூழலில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. தற்போதைய இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முறையின் கீழ், புதிய முயற்சிகள் மற்றும் நடைபெற்று வரும் பாதுகாப்புத் தொடர்பான பேச்சுக்களை வலுப்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply