மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ‘டைகான் வதோதரா’ நிகழ்ச்சியில் நாளை பங்கேற்கிறார்.

மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் நாளை (21-10-2023) வதோதராவில் நடைபெறும் டைகான் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். குஜராத்தை தளமாகக் கொண்ட தொழில்முனைவோருக்கு இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வாக அமையும். அந்த  மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய நிதித் திட்ட முன்முயற்சியை இதில் அறிவிக்கப்படுகிறது.

இந்த நிதி உதவி கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதத்தில் திரு ராஜீவ் சந்திரசேகர் தொடங்கிய முன்முயற்சிகளின் தொடர்ச்சியாகும். அப்போது அவர் குஜராத்தின் தொழில்முனைவோர் மற்றும் தனிநபர்களிடமிருந்து ஆதரவைத் திரட்டினார். குஜராத்தின் புத்தொழில் நிறுவனச் சூழலை ஊக்குவித்து வளர்க்கும் நோக்கத்துடன் அவர்கள் ரூ. 1,500 கோடியை முதலீடு செய்வதாக உறுதியளித்தனர். கடந்த ஆண்டு காந்திநகரில் நடைபெற்ற செமிகான்இந்தியா பியூச்சர் டிசைன் நிகழ்ச்சியின் போது இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

நாளை தமது கலந்துரையாடலின் போது, அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், குஜராத்தில் புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் அரசு மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துரைப்பார்.

திவாஹர்

Leave a Reply