மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) மற்றும் அதன் அனைத்து துறை அமைப்புகளும் நிலுவையில் உள்ள விஷயங்களுக்கு தீர்வு காண சிறப்பு இயக்கம் 3.0 இல் தீவிரமாக பங்கேற்றுள்ளன. .
இந்த ஆண்டு சிபிஐசி போதைப் பொருட்கள் மற்றும் சிகரெட் போன்ற பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. அதன்படி, இதுவரை ரூ.1,000 கோடி மதிப்புள்ள 365 கிலோ போதைப் பொருட்களும், ரூ.13 கோடி மதிப்புள்ள 1.35 கோடி சிகரெட்டுகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
சி.பி.ஐ.சி மற்றும் அதன் பல்வேறு கள அலுவலகங்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக முகவரிகள் மூலம் விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் தூய்மையின் செய்தியைப் பரப்பவும் இதுவரை 391 க்கும் மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தூய்மை இயக்கம் 3.0 இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எஸ்.சதிஸ் சர்மா