அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரூ.17,500 கோடி மதிப்பிலான 26 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார் .

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரூ.17,500 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் 26 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் திரு. நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் முடிவடைந்த திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் ஜெனரல் திரு. வி.கே.சிங், அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா. மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் என்.எச்.ஐ.டி.சி.எல் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திப்ருகார்-தின்சுகியா-லெடோ திட்டம் மேல் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதையும், உத்திப்பூர்வமான இருப்பை அதிகரிப்பதையும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சில்சார் முதல் லைலாப்பூர் பிரிவு மிசோரமின் பராக் பள்ளத்தாக்கை இணைக்கும், இது சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். தேமாஜி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை -515 வடக்கு அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும்.

தேசிய நெடுஞ்சாலை -137 திமா ஹசாவோ பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும் மற்றும் மேற்கு மணிப்பூருக்கு மாற்றுப் பாதையை வழங்கும். பைகான் முதல் கவுகாத்தி விமான நிலையப் பிரிவு ஜோகிகோபாவில் உள்ள மல்டி-மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவுக்கு வசதியாக இருக்கும். கூடுதலாக, புதிய பாலங்கள் கட்டுவது நெரிசலைக் குறைக்கும் மற்றும் பிராந்தியத்தில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply