ஜம்மு-காஷ்மீரில், 1.08 கிலோமீட்டர் நீளமுள்ள 4 பாதைகளுடன் குறிப்பிடத்தக்க சாதனையாக ராம்பன் பாதையை வெற்றிகரமாக முடித்துள்ளோம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தொடர்ச்சியான இடுகைகளில் தெரிவித்துள்ளார். ரூ.328 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலை -44-ன் உதம்பூர்-ராம்பன் பிரிவில் அமைந்துள்ளது.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீருக்கு சிறந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்று அவர் கூறினார். இந்த மகத்தான சாதனை பிராந்தியப் பொருளாதார வளத்தை ஊக்குவிப்பதோடு, ஓர் உயர்நிலை சுற்றுலாத் தலமாக அதன் ஈர்ப்பை அதிகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
திவாஹர்