ரோமன் கத்தோலிக்க மதத்தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ், இரண்டு நாள் பயணமாக இன்று காலை இலங்கை பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது மனைவி ஜெயந்தி புஷ்பா குமாரி மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அதன் பின்னர் வாகனத்தில் கட்டுநாயக்க, சீதுவை, ஜாஎல, கந்தானை, வத்தளை, நவலோக சுற்றுவட்டம், ஜப்பான் நட்புறவு பாலம், இங்குறுக்கடை சந்தி, ஆமர் வீ்தி, சங்கராஜ மாவத்தை சந்தி, மருதானை சந்தி, மருதானை வீதி, புஞ்சிபொரளை, பொரளை கனத்தை சுற்றுவட்டம், பெளத்தாலோக மாவத்தை வரை பேரணியாக பயணித்தார்.
போப்பாண்டவர் பிரான்சிஸ் வருகையை முன்னிட்டு, இலங்கை விழாக்கோலம் பூண்டுள்ளது.
-எஸ்.சதிஸ்சர்மா.