கொல்கத்தாவில் உள்ள இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு. வி.எல் காந்தா ராவ் நேற்று அங்கு சென்றார்.
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான தாம்ரா பவனுக்கு முதல் முறையாக வருகை தந்த திரு ராவை அந்நிறுவனத்தின் முதன்மை மேலாண் இயக்குநர் திரு கன்ஷியாம் சர்மா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
ஒரு விரிவான விளக்கக்காட்சியின் மூலம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய திட்டங்கள் குறித்து செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, ஹெச்சிஎல் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளுடன் வி.எல்.காந்தா ராவ் விரிவாக கலந்துரையாடினார். இந்தியாவின் ஒரே தாமிர சுரங்க நிறுவனமான ஹெச்.சி.எல்-ன் தனித்துவமான நிலையைப் பாராட்டிய திரு ராவ், தாமிரத் தாது மற்றும் உலோக உற்பத்தியை அதிகரிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிர்வாக மற்றும் கொள்கை முடிவுகளில் சுரங்க அமைச்சகம் சாத்தியமான அனைத்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கும் என்றும் அவர் கூறினார். ஹெச்.சி.எல் நிறுவனத்திற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஹெச்.சி.எல் ஊழியர்கள் தங்கள் பணியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுமாறு திரு ராவ் ஊக்குவித்தார்.
எம்.பிரபாகரன்