ஏற்காடு தாலுக்காவில் உள்ள வெள்ளக்கடை அரசு மேல்நிலை பள்ளியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன் தலைமையில் துவங்கியது. விழாவில் ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை, வெள்ளக்கடை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
வெள்ளக்கடை ஊராட்சி மன்ற தலைவர் பேசும்போது, வருடா வருடம் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்குவது போல் இந்த ஆண்டும் வழங்க போவதாக கூறினார்.
-நவீன்குமார்.