ஜி20 தின்க்யூ இந்திய கடற்படை விநாடி வினா – தொடுவானத்திற்கு அப்பால் பயணம் .

இந்தியக் கடற்படை மற்றும் கடற்படை நல்வாழ்வு மற்றும் நலச்சங்கம் பல ஆண்டுகளாக, கடற்படை வார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டியை நடத்தி வருகின்றன.

“இந்திய கடற்படை விநாடி வினா – தின்க்யூ” என்று பெயரிடப்பட்டுள்ள இதன் 2023 பதிப்பு உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது, மதிப்புமிக்க ஜி 20-ல் இந்தியாவின் தலைமைத்துவத்தைக் குறிக்கும் நடப்பு ஆண்டில் ஜி 20 செயலகத்திடமிருந்து கூட்டாண்மை மற்றும் ஆதரவைப் பெற்றுள்ளது. எனவே, மிகவும் பொருத்தமாக, இந்த நிகழ்வு ஜி 20 தின்க்யூ என்றும் அழைக்கப்படுகிறது.

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், மும்பை மற்றும் புதுதில்லியிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஜி-20 தின்க்யூ தேசிய சுற்றில் 11,741 பள்ளிகள் பதிவு செய்துள்ளன. முதல் கட்ட சுற்று செப்டம்பர் 14 அன்று நிறைவடைந்தது, 3902 பள்ளிகள் இரண்டாம் கட்டத்துக்கு தகுதி பெற்றன.

இரண்டாம் சுற்று அக்டோபர் 3 அன்று நடத்தப்பட்டது, மொத்தம் 1674 பேர் அக்டோபர் 10 அன்று நடத்தப்பட்ட காலிறுதிக்கு தகுதி பெற்றனர். காலிறுதிப் போட்டியில் பள்ளிகள் ஒவ்வொன்றும் கடுமையான போட்டியில் ஈடுபட்டன.

இதனால் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அக்டோபர் 18 அன்று டை பிரேக்கர் சுற்றில் ஒருவருக்கொருவர் போட்டியிட தேர்வு செய்யப்பட்டனர். இந்த சுற்றில் அரையிறுதிக்கு 16 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. :

இந்த 16 அணிகளும் முறையே நவம்பர் 17, 18, 23 ஆகிய தேதிகளில் என்.சி.பி.ஏ மற்றும் கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெறும் தேசிய அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்காக மும்பையில் கூடுகின்றன.

இதில் பங்கேற்கும் மாணவர்கள் சீருடையில் உள்ள கடற்படை வீரர்களை சந்தித்து உரையாடவும், மும்பை மேற்கு கடற்படை கட்டளையில் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்களில் கடற்படை நடவடிக்கைகளின் அற்புதமான உலகத்தை காணவும் வாய்ப்பு கிடைக்கும்.

தேசிய சுற்று முடிந்ததும், புதுதில்லியில் உள்ள இந்தியா கேட்டில் நடைபெறும் சர்வதேச சுற்றில் பங்கேற்பதற்காக ” இந்தியா அணி” அமைப்பதற்காக அனைத்து இறுதிப் போட்டியாளர்களில் இருந்து சிறந்த இரண்டுபேரை நடுவர் குழு அடையாளம் காணும்.

சர்வதேச சுற்றுக்கு, அனைத்து ஜி 20 +09 நாடுகளுக்கும் அழைப்புகள் வழங்கப்பட்டன,மேலும் 23 சர்வதேச அணிகள் நவம்பர் 19 அன்று புதுதில்லியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.

நவம்பர் 23 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள புகழ்பெற்ற இந்தியா கேட் மைதானத்தில் இந்த இறுதிபோட்டி நடைபெற உள்ளது, இது பள்ளி மாணவர்களுக்கு அறிவுசார் பரிமாற்றம் மற்றும் போட்டிக்கான உலகளாவிய மேடையை வழங்குகிறது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply