பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 நவம்பர் 14-15 தேதிகளில் ஜார்கண்ட் செல்கிறார். நவம்பர் 15 ஆம் தேதி காலை 9:30 மணியளவில், ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட அருங்காட்சியகத்திற்கு பிரதமர் வருகை தருகிறார். அதன்பிறகு, அவர் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த ஊரான உலிஹாட்டு கிராமத்தை அடைந்து, அங்குள்ள பகவான் பிர்சா முண்டாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார். பகவான் பிர்சா முண்டா பிறந்த ஊரான உலிஹட்டு கிராமத்திற்குச் செல்லும் முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். குந்தியில் காலை 11:30 மணியளவில் மூன்றாவது ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ், 2023 கொண்டாட்டத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். நிகழ்ச்சியின் போது, பிரதமர் ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ மற்றும் பிரதான் மந்திரி குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். அவர் PM-KISAN இன் 15 வது தவணையை வெளியிடுவார் மற்றும் ஜார்க்கண்டில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார், நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா
இந்தத் திட்டங்களின் பலன்கள் அனைத்து இலக்குப் பயனாளிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களின் நிறைவை அடைவதே பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். திட்டங்களின் நிறைவு நோக்கத்தை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக, ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் அன்று பிரதமர் ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’வை தொடங்குவார்.
திவாஹர்