பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணியால் ஈர்க்கப்பட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அதன் கள அலுவலகங்களுடன் இணைந்து 2023 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை சிறப்பு இயக்கம் 3.0 -ல் பங்கேற்றது.
மொத்தம் 1013 வெளிப்புற இயக்கங்கள் நடத்தப்பட்டன. 1972 இடங்கள் கண்டறியப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. 2,01,729 கிலோ தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, ரூ.3.62 கோடி வருவாய் ஈட்டப்பட்டு, 29,670 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. 49,984 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன, அவற்றில் 28,574 கோப்புகள் அகற்றப்பட்டன. அத்துடன் 841 மின் கோப்புகள் நீக்கப்பட்டன. சிறப்பு இயக்கம் 3.0 பணியின் போது மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து 1837 பதிவுகள் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டன. பொதுமக்களின் குறைகள், மக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காண்பதில் அமைச்சகம் 100% இலக்கை எட்டியுள்ளது, மேலும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், 2 பிரதமர் அலுவலக குறிப்புகள் மற்றும் 7 நாடாளுமன்ற உத்தரவாதங்களுக்கு தீர்வு கண்டுள்ளது.
சேமிப்பு அறையை பொழுதுபோக்கு மையமாக மாற்றுதல், ஏரி நீர்நிலையை சுத்தம் செய்தல், கழிவுகளிலிருந்து சிறந்தவற்றை உருவாக்கும் முன்முயற்சி, குப்பை கொட்டும் இடத்தை சீர் செய்தல், பழைய பொருட்கள் சேமிப்பை அறையை யோகா மையமாக மாற்றுதல் ஆகிய சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
எஸ்.சதிஸ் சர்மா