சுரங்கம் மற்றும் கனிம செயலாக்கத்தில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க புத்தொழில் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து சுரங்க அமைச்சகம் பரிந்துரைகளை வரவேற்கிறது .

புத்தொழில் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. “சுரங்கம், கனிம செயலாக்கம், உலோகவியல் மற்றும் மறுசுழற்சித் துறையில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புத்தொழில் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து இரண்டு ஆண்டு காலத்திற்கு பரிந்துரைகள் வரவேற்கப்படும்.

இதன் மூலம் அவர்கள் முதலீடுகளைத் திரட்டக்கூடிய அல்லது வணிக வங்கிகள் / நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறும் நிலையை அடைய உதவும். புதுமையான தொழில்நுட்பங்கள் / தயாரிப்புகள் / சேவைகளின் வளர்ச்சி மற்றும் வணிகமயமாக்கலுக்கு இடையில் ஒப்பீட்டளவில் இடையூறு இல்லாத முறையில் ஒரு பாலமாகச் செயல்பட இந்த நிதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முழு திட்ட மேம்பாட்டு காலத்திலும், கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கும் ஆதரவு வழங்கப்படும். செயல்படுத்தும் முகமையின் கீழ் உள்ள வசதி மற்றும் வழிகாட்டுதல் குழுவால் அல்லது தொழில் காப்பகங்களின் ஆதரவு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை ஆகியவையும் வழங்கப்படும்.

மேலும், சுரங்கம், கனிம செயலாக்கம், உலோகவியல் மற்றும் மறுசுழற்சி ஆகிய துறைகளில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முன்னோடி வாய்ப்பு வழங்கப்படும். வடகிழக்கு பிராந்தியத்தில் புத்தொழில் நிறுவனங்கள் / சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிர் தலைமையிலான நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

திவாஹர்

Leave a Reply