துறைகளுக்கு இடையிலான 3-வது ஹாக்கி இந்தியா மகளிர் சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார்.

துறைகளுக்கு இடையிலான 3-வது ஹாக்கி இந்தியா  மகளிர் சீனியர் தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார். தில்லி சிவாஜி அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் ஜெயின், இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் திரு ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலாளர் திரு போலாநாத், இந்திய ஹாக்கி வீரர்களான அஜித் பால் சிங், ஜாபர் இக்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நடத்துகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஹர்தீப் பூரி, அண்மையில் ஆசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். தற்போது இந்தப் போட்டியில் பங்கேற்கும் 8 ஹாக்கி அணிகளின் வீராங்கனைகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

தற்போது சீனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் விளையாடும் இந்த வீராங்கனைகளில் பலர்,  வருங்காலத்தில் இந்திய அணியில் இடம் பெற்று உலக சாம்பியன்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், வரலாற்றாசிரியரும், இந்திய ஹாக்கி தொடர்பான கட்டுரையாளருமான திரு.கே.ஆறுமுகம், அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக் கௌரவிக்கப்பட்டார்.

நாடு முழுவதிலுமிருந்து எட்டு மகளிர் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம், யூகோ வங்கி, இந்திய விளையாட்டு ஆணையம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, சகஸ்த்ரா சீமா பால், தமிழ்நாடு காவல்துறை மற்றும் போட்டியை நடத்தும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்-ஆகிய  அணிகள்  இதில் பங்கேற்றுள்ளன. இன்று (15.11.2023) தொடங்கியுள்ள இப்போட்டி வரும் 21.11.2023 வரை நடைபெறுகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply