இந்தியாவின் தேசிய நலன்களை மேம்படுத்த கினியா வளைகுடா கடற்கொள்ளையர்களுக்கு எதிரான இரண்டாவது ரோந்துப் பணியை இந்தியக் கடற்படை நிறைவு செய்தது .

இந்தியாவின் தேசிய நலன்களை மேம்படுத்த கினியா வளைகுடா கடற்கொள்ளையர்களுக்கு எதிரான இரண்டாவது ரோந்துப் பணியை இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். சுமேதா நிறைவு செய்தது. இந்தக் காலகட்டத்தில், ஐ.என்.எஸ் சுமேதா கினியா வளைகுடாவில் 31 நாட்கள் கடற்கொள்ளை தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டது. இந்த முக்கியமான கடல் பகுதியில் இந்தியக் கடற்படை மேற்கொள்ளும் இரண்டாவது ரோந்து நடவடிக்கை இதுவாகும்.

செப்டம்பர் – அக்டோபர் 22 வரை ஐ.என்.எஸ் தர்காஷ் மூலம் முதலாவது கினியா வளைகுடா கடற்கொள்ளை தடுப்பு ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிராந்தியம் இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பதால் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு முக்கியமானது.

செனகல், கானா, டோகோ, நைஜீரியா, அங்கோலா மற்றும் நமீபியா உள்ளிட்ட நாடுகளின் பிராந்திய கடற்படைகளுடன் இணைப்பை மேம்படுத்துவதையும் சுமேதாவின் நிலைநிறுத்தம் உறுதி செய்தது. ‘வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்) என்ற தத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நட்பு நாடுகளுக்கு உதவும் விதமாக கப்பல்களின் பணியாளர்கள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சியின் மூலம் பிராந்திய கூட்டாளர்களின் திறனை மேம்படுத்தவும் இந்த பணியமர்த்தல் பயன்படுத்தப்பட்டது.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய கூட்டுப் பயிற்சியில் கப்பல்கள் பங்கேற்றது இந்த நிலைநிறுத்தலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

ஐ.என்.எஸ் சுமேதாவின் செயல்பாட்டு நிலைநிறுத்தம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான புவியியல் பிராந்தியத்தில் நமது தேசிய நலன்களை மேலும் வலுப்படுத்துவதை உறுதி செய்துள்ளது.

திவாஹர்

Leave a Reply