அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஜெ.ஜெயலலிதா தரப்பில், மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் ஆஜராகி வாதிட்டு வருகிறார்.
ஜெ.ஜெயலலிதா மீதான வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என தி.மு.க.பொதுச் செயலாளர் க.அன்பழகன் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.
அப்போது, அரசு வழக்கறிஞருக்கு உதவுவது குறித்து எழுத்துப்பூர்வமான மனு அளிக்க வேண்டும். அன்பழகன் என்ன வழக்கறிஞரா? அவர் நேரில் ஆஜராக வேண்டும் என, நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி கண்டனம் தெரிவித்தார்.
அன்பழகனுக்கு 93 வயதாகிவிட்டது. அவருக்கு பதில் நான் ஆஜராகுவதாக அன்பழகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
இது கிரிமினல் வழக்கு. இந்த காரணம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என, நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி கண்டிப்புடன் கூறினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அன்பழகன் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்று, ஜெ.ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதிட்டார்.
ஜெ.ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகனை 3-வது தரப்பாக சேர்க்க கூடாது என, பவானிசிங்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in