இந்தியத் தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) கட்டாய சான்றிதழ் திட்டத்தின் கீழ் பல்வேறு காலணிகள் / காலணி உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரக்கட்டுப்பாட்டு ஆணைகளைக் (கியூ.சி.ஓ) கருத்தில் கொண்டு, பிஐஎஸ்சென்னை கிளை அலுவலகம் நேற்று சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து காலணிகள் தொடர்புடைய 40 உற்பத்தியாளர்கள் / ஆய்வகப் பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
பிஐஎஸ் சார்பாக, துணைதலைமை இயக்குநர் (தெற்கு மண்டலம்) திரு யுஎஸ்பி யாதவ் முக்கிய உரை நிகழ்த்தினார். வழங்கினார்; இயக்குநர் மற்றும் தலைவர்(சென்னை கிளை அலுவலகம்) திருமதி ஜி பவானி நிகழ்ச்சியின் நோக்கங்களை எடுத்துரைத்தார். டி. ஜீவானந்தம் அமர்வுகளை நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு காலணிகள்/காலணிகள் உதிரிபாகங்கள், தொடர்புடைய இந்திய தரநிலை விவரக்குறிப்புகள் கொண்ட தயாரிப்புகள் குறித்து பங்குதாரர்களுக்கு விளக்கப்பட்டது. பிஐஎஸ். அதன் முக்கிய செயல்பாடுகள் மற்றும் கட்டாய சான்றிதழ் குறித்தும் அறிமுகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து “பிஐஎஸ் கேர்” என்ற மொபைல் செயலி குறித்த விளக்கக்காட்சி, உற்பத்தியாளர்கள் / பங்குதாரர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். குறிப்பாக உங்கள் தரநிலைகளை அறிந்து கொள்ளுங்கள் என்ற அம்சத்துடன் உள்ளது. மேலும் தெரிவு 1 ( விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்கள் ஆகும் சாதாரண நடைமுறை) மற்றும் தெரிவு 2 (எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை, விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்கள்) ஆகியவற்றின்படி எங்கள் (manakonline) இணையத்தளத்தின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் விரிவாக விளக்கப்பட்டது . முடிவில், பங்கேற்பாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு உரிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எம்.பிரபாகரன்