இந்தியாவின் சமூகநீதித் தொட்டில் தமிழ்நாடு.
நூற்றாண்டுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் இந்தியாவுக்கான சமூகநீதி தமிழ்நாட்டில் பிறந்ததால் தான் இந்த பெரும்பெயர் நமக்கு!
இரண்டாம் தலைமுறை சமூகநீதி இப்போது
பிகார், கர்நாடகத்தில் தொடங்கி இந்தியா
முழுவதும் பிரசவித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் பல மாநிலங்களிலும் கருக் கொள்கிறது!
ஆனால், சமூகநீதியின் தாய் என மார்தட்டும்
தமிழ்நாட்டின் வயிறு வாடிக் கொண்டிருக்கிறது,
அதன் கருப்பையோ காய்ந்து கொண்டிருக்கிறது!
காரணமான ஆட்சியாளர்களுக்கோ கவலை இல்லை!
தமிழ்நாடு என்ற தொட்டிலில் சமூகநீதியாவது இருக்கிறதா?
என எட்டிப் பார்த்தேன். அது ஆடாமல் காலியாகக் கிடந்தது.
இரும்புக் கட்டில் என்பதால் ஆட மறுக்கிறதோ? என்று
ஆட்டிப் பார்த்தேன். அந்தத் தொட்டில் துரு பிடித்துக் கிடந்தது!
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்