தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு புதிய ஆவின் டிலைட் பாலை அறிமுகம் செய்கிறது. ஏற்கனவே இருந்த அதிக கொழுப்பு சத்துடைய ஆவின் பச்சை பாக்கெட் விற்பனை தொடரவேண்டும்.
ஆவின் நிறுவனம் புதிய ரக பால் பாக்கெட்டை அறிமுகம் செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு 3.5 சதவிகிதம் குறைந்த கொழுப்பு சத்துடைய டிலைட் பாலை 4.5 சதவிகிதம் கொழுப்பு சத்துடைய பச்சை நிற பாக்கெட் பாலை நிறுத்திவிட்டு அதே விலையில் விற்க முடிவு செய்திருப்பது மறைமுகமாக மக்களை ஏமாற்றும் செயல்.
புதிதாக அறிமுகம் செய்யும் ஆவின் டிலைட் பால் மற்ற வகையான பாலுடன் சேர்த்து விற்க வேண்டுமே தவிர, பழைய பச்சை நிற பால் விற்பனையை நிறுத்தும் முடிவு தேவையற்றது. நியாயமில்லாதது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகமாக ஆவின் பாலையே விரும்பி வாங்கும் இச்சூழலில் ஆவின் நிறுவனம் இபோல் செயல்படுவது நல்லதல்ல.
ஏற்கனவே ஆவின் பால் பொருட்களின் விலையை ஏற்றி மக்களை மீது சுமையை ஏற்றியுள்ளது. தற்பொழுது புதிய ரகம் பால் அறிமுகம் என்ற பெயரில் மறைமுக விலையேற்றம் என்பது மக்களை தனியார் வேறு நிறுவனங்களின் பாலை வாங்க திசை திருப்புவதாகவே அமையும். ஆகவே ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் விற்பனை தொடர வேண்டும். மேலும் புதிய ரக டிலைட் பாலின் நுண்ணுட்ட சத்துக்களுக்கு ஏற்ப விலையை குறைத்து மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா