மதிப்புமிக்க ஜி 20 தலைமைத்துவத்திற்கு இந்தியா பொறுப்பேற்றதை நினைவுகூரும் வகையில், இந்திய கடற்படை வினாடி வினா இந்த ஆண்டு உலகளாவிய அளவில் நடைபெற்றது. எனவே, வினாடி வினா ‘தேசிய’, ‘சர்வதேச’ சுற்றுகளை உள்ளடக்கிய “ஜி20 திங்க் ” என்று பொருத்தமாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச இறுதிப்போட்டிகள் நவம்பர் 23-ம் தேதி புகழ்பெற்ற இந்தியா கேட்டில் நடைபெற உள்ளது.
தேசிய அளவிலான சுற்றுப் போட்டியில் 11741 பள்ளிகள் பங்கேற்றன. இதில் ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு, மாணவர்கள் கலந்துகொண்டனர். இரண்டு ஆன்லைன் வெளியேற்றுதல் சுற்றுகள், ஒரு ஆன்லைன் காலிறுதி, டை பிரேக்கர் ஆகியவை மூலம் தேசிய அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்காக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மும்பையில் 16 பேர் பங்கேற்ற அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. அவை முறையே 2023, நவம்பர் 17-18 ஆகிய தேதிகளில் என்.சி.பி.ஏ அரங்கம், கேட்வே ஆப் இந்தியா ஆகிய இடங்களில் நடைபெற்றன. தேசிய சுற்றில் வெற்றி பெற்ற குருகிராமில் உள்ள டி.ஏ.வி பொதுப் பள்ளி சர்வதேச சுற்றில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
சர்வதேச சுற்றில் பங்கேற்க இதன் விளைவாக 23 சர்வதேச அணிகள் போட்டியில் பங்கேற்க ஜி20 உட்பட 23 நாடுகள் பதிவு செய்திருந்தன.
இதில் சுஷ்மா ஸ்வராஜ் பவனில் 3 அரையிறுதி மற்றும் வைல்ட் கார்டு சுற்று 2023, நவம்பர் 21 அன்று நடைபெற்றது. இதில் முதல் எட்டு அணிகள் சர்வதேச இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
சர்வதேச சுற்றின் இறுதிப் போட்டி நவம்பர் 23-ம் தேதி இந்தியா கேட்டில் நடைபெற உள்ளது.
2023, டிசம்பர் 1-ம் தேதி பிரேசிலிடம் ஜி 20 தலைமைத்துவப் பொறுப்பை இந்தியா ஒப்படைக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சி இறுதி அத்தியாயமாக இருக்கும்.
எம்.பிரபகரன்