உலகளாவிய சினிமாவை வளப்படுத்தும் இணையற்ற உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்பத் திறன் இந்தியாவிடம் உள்ளது: நடுவர் தலைவர் சேகர் கபூர்.

கோவாவில் நடைபெற்று வரும் 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்ப்பது குறித்த தங்கள் ஆழமான அனுபவங்களையும் எண்ணங்களையும் சர்வதேச நடுவர் குழு உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். நாளை நடைபெறும் நிறைவு விழாவில் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள், நடுவர் குழு உறுப்பினர்கள் ‘சர்வதேசப் போட்டி’ மற்றும் இந்தப் பிரிவில் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டிய விருதுகள் குறித்து விவாதித்தனர்.

சர்வதேச நடுவர் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதும், மாறுபட்ட மற்றும் அழுத்தமான கதைகளின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுப்பதும் தங்களுக்கு ஒரு சிறந்த தனிப்பட்ட அனுபவம் என்று நடுவர் குழுவினர்  ஒருமனதாகக் கருத்து தெரிவித்தனர். இந்திய சர்வதேசத் திரைப்பட விழா தொடங்கப்பட்டதிலிருந்து மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்றும், பெறப்பட்ட பதிவுகள் மற்றும் தேர்வுகளின் பன்முகத்தன்மை காரணமாக இது ஏற்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நடுவர் தலைவராக இருக்கும் பிரபல திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் கூறுகையில், உலகளாவிய சினிமாவை வளப்படுத்தும் இந்தியாவின் இணையற்ற உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை  எடுத்துரைத்தார். “இந்தியா உலகின் மிகப்பெரிய உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்ப தளத்தைக் கொண்டுள்ளது, மேலும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா போன்றவை  இந்தியாவின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள உலகின் பிற பகுதிகளுக்கு உதவுகின்றன” என்று திரு சேகர் கபூர் மேலும் கூறினார். இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், “ஒரு படைப்பில் இறுதி அதிகாரம் என்று எதுவும் இல்லை” என்று கூறினார்.

திவாஹர்

Leave a Reply