முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர்களின் மறைவுக்கு இந்திய துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஸ்ரீ ஜக்தீப் தன்கர் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவின் 262 வது அமர்வின் (குளிர்கால அமர்வு) தொடக்கத்தில் , தலைவர் பேராசிரியர். எம்.எஸ்.சுவாமிநாதன், டாக்டர். எம்.எஸ்.கில், ஸ்ரீ லலித்பாய் மேத்தா, ஸ்ரீமதி பசந்தி சர்மா மற்றும் ஸ்ரீ டி.பி. சந்திரே கவுடா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
1960 களில் இந்தியாவில் விவசாய மறுமலர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்ததற்காக ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ பேராசிரியர் சுவாமிநாதனைப் பாராட்டிய துணைத் தலைவர், விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் பாலினக் கருத்துகளை முக்கிய நீரோட்டத்தில் கொண்டு செல்வதில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் குறிப்பிட்டார். “அவரது பங்களிப்புகள் இந்தியாவை வறட்சியால் பாதிக்கப்பட்ட, உணவு இறக்குமதி செய்யும் நாட்டிலிருந்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதாக அறிவிக்க உதவியது,” என்று அவர் கூறினார்.
டாக்டர். எம்.எஸ். கில் ஒரு “சிறந்த நிர்வாகி” என்று ஒப்புக்கொண்ட துணைக் குடியரசுத் தலைவர், தலைமைத் தேர்தல் ஆணையராக டாக்டர். கில் இருந்த காலத்தில்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தியத் தேர்தல்களில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன என்பதை நினைவு கூர்ந்தார். “டாக்டர். எம்.எஸ். கில்லின் மறைவால், ஒரு திறமையான நிர்வாகி, ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழந்ததற்காக தேசம் துக்கம் அனுசரிக்கிறது,” என்று அவர் கூறினார்.
திவாஹர்