மனித உரிமைகளின் முன்னேற்றத்தில், மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு தாயகமான இந்தியாவில் ஏற்பட்டு வரும் உறுதியான மாற்றங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று எடுத்துரைத்தார்.
“நமது நாட்டைப் போல உலகின் எந்தப் பகுதியும் மனித உரிமைகளால் மலர்ந்து, செழிப்பாக இல்லை”, என்று அவர் குறிப்பிட்டார்.
பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற மனித உரிமைகள் தின விழாவில் சிறப்புரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், “மனித உரிமைகள் மற்றும் விழுமியங்கள் மலர்ந்ததன் காரணமாக நமது அமிர்த காலம் நமது கௌரவ காலமாக மாறியுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
“நமது டி.என்.ஏ.வில் உள்ள மனித உரிமைகளை மதிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் நமது ஆழ்ந்த அர்ப்பணிப்பை நமது நாகரிக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார். மனித உரிமைகளை வளர்ப்பதிலும், ஊக்குவிப்பதிலும், வளப்படுத்துவதிலும் இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகளை வளர்ப்பதை ‘ஜனநாயகத்திற்கான அடித்தளம்’ என்று அழைக்கும் குடியரசுத் துணைத்தலைவர், “சட்டத்தின் முன் சமத்துவம் என்பது மனித உரிமையை ஊக்குவிப்பதில் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகும்” என்று வலியுறுத்தினார்.
மனித உரிமைகளை வளர்ப்பதற்காக மாநிலத்தின் மூன்று அங்கங்களான சட்டமன்றம், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை அவர் பாராட்டினார், ஏனெனில் “மனித உரிமைகளுக்கான மரியாதை நமது நாகரிக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பில் பொதிந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
இலவசங்களின் அரசியலில் சமீபத்திய எழுச்சி குறித்து பேசிய குடியரசுத் துணைத்தலைவர், இது செலவின முன்னுரிமையை சிதைக்க வழிவகுக்கும் என்றும், “நிதி மானியங்கள் மூலம் பாக்கெட்டை வலுப்படுத்துவது சார்புநிலையை மட்டுமே அதிகரிக்கிறது” என்பதால் பெரும் பொருளாதார நிலைத்தன்மையின் அடிப்படை கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
எஸ் சதிஷ் சர்மா