அக்னியின் ஆராய்ச்சி சென்னை நிறுவனம் நடத்தும் “அக்னியின் இக்னைட்” 2014-2015 பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படைப்புக் கண்காட்சி க்ஷத்ரிய வித்யாசல உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இக்கண்காட்சியினை மாவட்ட கல்வி அதிகாரி A.சின்னராசு தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த கண்காட்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு அறுபது அறிவியல் படைப்புகளை செய்து காட்டியும், விளக்கியும் கூறினார்கள்.
இதை ஊக்குவிக்கும் விதமாக அக்னி ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, மிகுந்த முனைப்போடு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், அக்னியின் இக்னைட் 2014-2015-யை முன்னின்று நடத்தி வருகிறது. இதில் வெற்றிபெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வர். இதில் ஜூனியர் மற்றும் சீனியர் வகையாக பிரித்து ரூபாய் ஐந்து லட்சம் மதிப்புள்ள பரிசுகளும் வெகுமதிகளும் வழங்கப்பட உள்ளன.
இக்கண்காட்சியில் அக்னியின் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் டாக்டர். பால முருகன், சங்கரைய்யா, கே.வி.எஸ். பள்ளி செயலாளர் டாக்டர்.சி.எஸ்.தேவேந்திரன், கே.வி.எஸ்.பள்ளி முதல்வர் கலாதேவி, பேராசிரியர்.கண்ணன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
-பி.கணேசன் @ இசக்கி.