மேற்கு வங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 2023 டிசம்பர் 18 முதல் 23 வரை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பயணம் மேற்கொள்கிறார் .
டிசம்பர் 18-ம் தேதி கரக்பூர் ஐஐடியின் 69-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் செகந்திராபாத் போலாராமில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகைக்கு செல்கிறார்.
டிசம்பர் 19-ம் தேதி ஹைதராபாதில் நடைபெறும் ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூல் சொசைட்டியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார்.
தெலங்கானா மாநிலம், யாதத்ரி புவனகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள கைத்தறி மற்றும் நூற்பாலை அலகு மற்றும் கருப்பொருள் அரங்கினை டிசம்பர் 20-ஆம் தேதி குடியரசுத்தலைவர் பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார். அன்று மாலை, செகந்திராபாதில், எம்.என்.ஆர்., கல்வி அறக்கட்டளையின் பொன்விழாவில், குடியரசுத்தலைவர் பங்கேற்கிறார்.
டிசம்பர் 21-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்வேறு திட்டங்களைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்.
டிசம்பர் 22-ம் தேதி குடியரசுத்தலைவர் மாளிகையில் மாநிலத்தின் முக்கியப் பிரமுகர்கள், முன்னணி குடிமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருக்குக் குடியரசுத்தலைவர் வரவேற்பு அளிக்கிறார்.
டிசம்பர் 23-ம் தேதி ராஜஸ்தானின் பொக்ரானில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு பயிற்சியை குடியரசுத்தலைவர் நேரில் பார்வையிடுகிறார்.
திவாஹர்