அமெரிக்கா அதிபர் ஒபாமா காலை 10 மணிக்கு இந்தியா வந்தடைவார்!

?????????

obama

அமெரிக்கா அதிபர் ஒபாமா,  அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள விமான நிலைய தளத்தில் ஏர்போர்ஸ் -1 விமானம் மூலம் இந்தியாவிற்கு புறப்பட்டார். அவருடன் மனைவி மிட்செல் வருகின்றார்.

சிறப்பு விமானம் ஜெர்மனி வழியாக நாளை காலை 10 மணிக்கு இந்தியா வந்தைடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன், அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என சுமார் 2 ஆயிரம் பேர் கொண்ட குழுவினரும் வருகின்றனர். 

ஒபாமாவின் வருகையையொட்டி குடியரசு தினவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணியுடன் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும் என்றும், அதன்பிறகு அங்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், மத்திய ஊழியர் நலம் மற்றும் பயிற்சி துறை அறிவித்து உள்ளது.

-ஆர்.மார்ஷல்.