விமான நிலைய ஆபரேட்டர்களுடனான ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம் சிந்தியா தலைமை தாங்கினார்.

மத்திய சிவில் விமான போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா 2023, டிசம்பர் 19 அன்று விமான நிலைய ஆபரேட்டர்களுடன் ஆலோசனைக் குழு கூட்டத்தை நடத்தினார். வரவிருக்கும் பருவகாலத்தை மனதில் கொண்டு, விமான நிலையங்களில் நெரிசலைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இந்தக் காலகட்டத்தில் பயணிகளுக்கு சுமூகமான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் பயண அனுபவத்தை எளிதாக்க அமைச்சகம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக செயல்படுத்த அவர் உறுதியளித்தார்.

கூட்டத்தில், ஆபரேட்டர்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்த அமைச்சர், பயணிகளின் வசதிக்காக உகந்த செயல்பாட்டை உறுதி செய்ய வழிகாட்டினார். கையேட்டில் இருந்து டிஜிட்டல் சோதனைகள் மற்றும் நுழைவு வாயில் செயல்முறைகளுக்கு மாற்றும் விகிதத்தை அதிகரிக்கவும், இடையூறு இல்லாத மற்றும் விரைவான பயணிகள் நடமாட்டத்தை உறுதி செய்யவும் ‘டிஜியாத்ரா’வை ஊக்குவிப்பது விவாதத்தின் ஒரு முக்கிய தலைப்பாகும். தற்போது, லக்னோ, மும்பை, அகமதாபாத், கொச்சி, ஜெய்ப்பூர், குவகாத்தி, தில்லி, பெங்களூரு, வாரணாசி, விஜயவாடா, புனே, ஹைதராபாத், கொல்கத்தா விமான நிலையங்கள் உட்பட நாட்டின் 13 விமான நிலையங்களில் உள்நாட்டுப் பயணிகளுக்கு இந்த வசதி கிடைக்கிறது. கலந்துரையாடலில், புறப்பாடு, வருகை ஆகிய இரண்டிலும் சர்வதேசப் பயணிகள் அணுகுவதற்கு ‘டிஜியாத்ரா’வை ஒருங்கிணைப்பதற்கான சிறந்த நடைமுறைகளை ஆராய்வதற்காக, விமான நிலைய ஆபரேட்டர்கள் மற்ற நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் இயக்கப்பட்ட மாதிரிகளை வழங்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

அனைத்து விமான நிலைய ஆபரேட்டர்களின் மூலதன செலவின இலக்கையும் அமைச்சர் மறுஆய்வு செய்தார், இது மூன்றாம் காலாண்டில் பெறப்பட்ட உண்மைகளுடன் இணைக்கப்பட்டது.

திவாஹர்

Leave a Reply