சுற்றுலா / மதத் தலங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1,49,758 கோடி மதிப்பில் 321 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன .

தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு, பராமரிப்புக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முதன்மையான பொறுப்பாகும்.

சுற்றுலா, ஆன்மீகத் தலங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 8,544 கி.மீ தொலைவிலான 321 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 10,601 கோடி ரூபாய் செலவில் 296 கிலோ மீட்டர் தொலைவிற்கு 11 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது போன்று மற்ற மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பணிகள் நிறைவேற்றப்பட்டன.    

இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply