சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தேசிய வாக்காளர் தின பேரணி இன்று நடைப்பெற்றது. ஏற்காடு வட்டாட்சியர் எம்.கிருஷ்ணன் பேரணி தலைமையில் துவங்கியது.
ஏற்காடு புனித ஜோசப் பள்ளியில் துவங்கி, ஏற்காடு காவல் நிலையம், டவுண், பஸ் நிலையம், அண்ணா பூங்கா, உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஒண்டிக்கடை பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகில் பேரணி நிறைவடைந்தது.
பேரணியில் வருவாய் ஆய்வாளர்கள் கனேஷ், மகேஷ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜசேகர், பாஸ்கர் ஆனந்த், உட்பட 30-க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
இவர்கள் வாக்காளிப்பதின் அவசியத்தை விளக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியபடி, கோஷங்களை எழுப்பி சென்றனர். முன்னதாக தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
-நவீன் குமார்.