2023ம் ஆண்டில் மண்டல அளவிலான இணைப்பு(ஆர்.சி.எஸ்) திட்டத்தின் கீழ் 60 புதிய ஆர்.சி.எஸ் வழித்தடங்கள் தொடங்கப்பட்டன; உடான் திட்டத்தின் கீழ் 154 புதிய ஆர்.சி.எஸ் வழித்தடங்கள் வழங்கப்பட்டன; வடகிழக்கில் 12 புதிய ஆர்.சி.எஸ் வழித்தடங்கள் தொடங்கப்பட்டன.
91 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் டிஜி யாத்ரா செயலியைப் பயன்படுத்தினர், 35 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்தனர் . மேலும் 3 பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. 456 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 2023 வரை 55 தளங்களில் டி.ஜி.சி.ஏ-வால் அங்கீகரிக்கப்பட்ட 34 விமான பயிற்சி(எஃப்.டி.ஓ) அமைப்புகள் செயல்படுகின்றன. டி.ஜி.சி.ஏ முன்னெப்போதும் இல்லாத வகையில், வணிக பைலட்களுக்கான 1562 உரிமங்களை வழங்கியுள்ளது. ட்ரோன்களை இயக்குவோருக்கு சுமார் 9 ஆயிரம் ரிமோட் பைலட் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்ம் மூலம் வழங்கப்பட்டன. இந்தியாவின் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (எம்ஓசிஏ) 2023 ஆம் ஆண்டில் பல மைல்கற்களை எட்டியது, ஏனெனில் இத்துறை புதிய பிரிவுகளை அடைந்தது மற்றும் அதிவேகத்தில் விரிவடைந்தது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சில முக்கிய சாதனைகள் பின்வருமாறு:
ஆர்சிஎஸ்-உடான்
ஆர்.சி.எஸ்-உடான் 2016 ஆம் ஆண்டில் பல்வேறு பிராந்தியங்களை இணைக்கும் விமான சேவையற்ற / குறைந்த அளவு விமான சேவை கொண்ட வழித்தடங்களில் விமான நடவடிக்கைகளை செயல்படுத்தவும், சீரான பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மக்களுக்கு மலிவு விலையில் விமான போக்குவரத்து சேவையை வழங்கவும் தொடங்கப்பட்டது. ஆர்.சி.எஸ்-உடான் என்பது பெயரளவு வரியுடன் உடான் விமானங்களின் செயல்பாட்டின் விலைக் கொள்கையில் உள்ள மாறுபாட்டைக் கடக்க, பிரதான வழித்தடங்களில் ஒவ்வொரு புறப்பாடும் மானியத்தைக் கொண்ட ஒரு சுயநிதி திட்டமாகும்.
2023 ஜனவரி 01 முதல் 2023 டிசம்பர் 21 வரை 60 புதிய ஆர்.சி.எஸ் வழித்தடங்கள் தொடங்கப்பட்டன. ரூர்கேலா, ஹோலோங்கி, ஜாம்ஷெட்பூர், கூச் பிஹார், உத்கேலா மற்றும் ஷிவமொக்கா ஆகிய 6 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் 12 புதிய ஆர்.சி.எஸ் பாதைகள் தொடங்கப்பட்டுள்ளன. உடான் 4.2 & 5.0-ன் கீழ் 154 புதிய ஆர்.சி.எஸ் வழித்தடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டிஜியாத்ரா
முக அங்கீகார தொழில்நுட்பத்தின் (எஃப்.ஆர்.டி) அடிப்படையில் விமான நிலையங்களில் தடையற்ற செயலாக்கத்தை அடைவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாக டிஜி யாத்ரா செயலி உள்ளது. எந்தவொரு பயணியும் விமான நிலையத்தின் பல்வேறு சோதனைச் சாவடிகளைக் காகிதமற்ற மற்றும் தொடர்பு இல்லாத செயலாக்கத்தின் மூலம் முக அம்சங்களைப் பயன்படுத்தி அடையாளத்தை நிறுவலாம். பயணிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியே இந்தச் செயலியின் தளத்தில் பதிவு செய்யலாம். இதுவரை 35 லட்சத்துக்கும் அதிகமானோர் டிஜி யாத்ரா செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பின்வரும் 13 விமான நிலையங்களில் டிஜி யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது:-
01.12.2022 அன்று தில்லி, பெங்களூரு மற்றும் வாரணாசி விமான நிலையங்களில் தொடங்கப்பட்டது. ஹைதராபாத், புனே, கொல்கத்தா மற்றும் விஜயவாடாவில் 31.03.2023 அன்றும், அகமதாபாத், மும்பை, கொச்சி, குவஹாத்தி, ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ ஆகிய ஆறு விமான நிலையங்களில் 2023, ஆகஸ்ட் மாதத்திலும் தொடங்கபட்டன.
இது தொடங்கப்பட்டதிலிருந்து, 91 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்கள் வழியாக பயணிக்க டிஜி யாத்ரா வசதியைப் பயன்படுத்தியுள்ளனர். இறுதியில், அனைத்து விமான நிலையங்களும் படிப்படியாக டிஜி யாத்திரையால் நிர்வகிக்கப்படும்.
பசுமை விமான நிலையங்கள்
மத்திய அரசு பசுமை விமான நிலையக் கொள்கை, 2008ஐ வகுத்துள்ளது. இது நாட்டில் புதிய பசுமை விமான நிலையங்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வழங்குகிறது. கோவாவில் உள்ள மோபா, மகாராஷ்டிராவின் நவி மும்பை, ஷீரடி மற்றும் சிந்துதுர்க் ஆகிய நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு இதுவரை ‘கொள்கை அளவில்’ ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகாவில் கலபுரகி, விஜயபுரா, ஹாசன் மற்றும் சிவமொக்கா, மத்திய பிரதேசத்தில் தப்ரா (குவாலியர்), உத்தரபிரதேசத்தில் குஷிநகர் மற்றும் நொய்டா (ஜேவார்), குஜராத்தில் தோலேரா மற்றும் ராஜ்கோட், புதுச்சேரியில் காரைக்கால், ஆந்திராவில் தகதர்த்தி, போகபுரம் மற்றும் ஒரவாகல் (கர்னூல்), மேற்கு வங்கத்தின் துர்காபூர், சிக்கிமில் பாக்யாங், கேரளாவின் கண்ணூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இட்டாநகர் ஆகிய இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இவற்றில் துர்காபூர், ஷீரடி, சிந்துதுர்க், பாக்யாங், கண்ணூர், கலபுர்கி, ஒரவக்கல், குஷிநகர், இட்டாநகர், மோபா, சிவமோகா மற்றும் ராஜ்கோட் ஆகிய 12 பசுமை விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2023 ஆம் ஆண்டில், மோபா, சிவமோகா மற்றும் ராஜ்கோட் ஆகிய மூன்று கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்(ஏ.டி.சி.ஓ.) பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்
நாடு ஏ.டி.சி.ஓ.க்களுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டது. அமைச்சகம், பொது நிறுவனங்களின் துறையின் ஒப்புதலுடன், 2023 ஏப்ரல் மாதம் மேலும் 456 ஏ.டி.சி.ஓ பணியிடங்களை உருவாக்க ஒப்புதல் அளித்தது.
விமான பயிற்சி நிறுவனங்கள் (எஃப்.டி.ஓ)
2023 நவம்பர் 30 நிலவரப்படி நாட்டில் 55 தளங்களில் 34 டி.ஜி.சி.ஏ-அங்கீகரிக்கப்பட்ட எஃப்.டி.ஓக்கள் செயல்படுகின்றன. இவற்றில் அமேதியில் உள்ள இந்திராகாந்தி தேசிய விமான அகடாமி மத்திய அரசின் கீழும், எட்டு தளங்கள் மாநில அரசுகளின் கீழும், 25 தனியார் துறையின் கீழும் உள்ளன.
திவாஹர்