பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கர்னாலில் உள்ள இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அலுவலகத்தால் (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்), 27.12.2023 அன்று ஹரியானா மாநிலம் சோனிப்பட்டில் உள்ள ஜி.வி.எம். பெண்கள் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. சோனிப்பட் மாவட்டம் ராய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு மோகன்லால் படோலி, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பாரம்பரியக் கைவினைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கும் உதவிகள் குறித்த தகவல்களை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
ஹரியானா மாநிலத்தின் அனைத்துக் கைவினைஞர்களும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்து அதன் நன்மைகளைப் பெற வேண்டும் என்று திரு மோகன்லால் படோலி தனது உரையின் போது கூறினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் சார்பில் கூடுதல் மேம்பாட்டு ஆணையர் டாக்டர் இஷிதா கங்குலி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகளும், 300-க்கும் மேற்பட்ட கைவினைஞர்களும் இதில் பங்கேற்றனர்.
எம்.பிரபாகரன்