திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோதியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைப்பதற்காகவும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோதியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி உடனிருந்தார்.

தமிழ்நாட்டின் இதயமாக இருக்கும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணியை கடந்த 2019-ஆண்டு பிப்ரவரி. 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோதி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இப் பணிகள் 2021-ஆவது ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து புதிய முனையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர  விமானநிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் முற்றுப்பெறாத நிலையில் 2021, 22, 23 ஆகிய மூன்றாண்டுகள் தள்ளிப்போயின. அடுத்தடுத்து 3 முறை திறப்பு விழாவுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையிலும் பணிகள் முடிவடையாததால் திறப்பு விழா நடத்த முடியவில்லை. . இதனைத் தொடர்ந்து, கூடுதலான பணியாளர்கள் மூலம் கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக பணிகளை துரிதப்படுத்தியதின் காரணமாக பன்னாட்டு விமான நிலைய புதிய முனைய பணி முழுமையாக நிறைவடைந்தது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஜனவரி 2) திறந்து வைத்தார். இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினும் கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோதி வருகையையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்துள்ளனர்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை விழா கோலமாக் காட்சியளிக்கிறது.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply