முதல் முறையாக, என்.சி.சி குடியரசு தின முகாம் 2024 -ல் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த முழுவதும் மாணவிகளைக் கொண்ட பேண்டு வாத்தியக்குழு பங்கேற்கவுள்ளது .

தேசிய மாணவர் படை (என்.சி.சி) குடியரசு தின முகாம் 2024-ல் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 45 மாணவிகளைக் கொண்ட ஒரு பேண்ட் வாத்தியக் குழு முதன்முறையாகப் பங்கேற்கிறது. 13-15 வயதிற்குட்பட்ட சிறுமிகள், வடகிழக்கின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

இது குறித்து தில்லி கன்டோன்மென்ட்டில் 2024 ஜனவரி 03, அன்று, செய்தியாளர்களை சந்தித்த என்.சி.சி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங், நாடு முழுவதும் இருந்து 907 சிறுமிகள் உட்பட மொத்தம் 2,274 கேடட்கள் ஒரு மாத கால முகாமில் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்தார். இதில் ஜம்மு காஷ்மீர், லடாக்கைச் சேர்ந்த 122 பேரும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 177 பேரும் இடம் பெறுவார்கள் என்றும், மேலும், இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 25 நட்பு நாடுகளைச் சேர்ந்த கேடட்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த முகாமை குடியரசு துணைத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இணையமைச்சர், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படை தளபதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பார்வையிட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2023-ம் ஆண்டில் என்.சி.சி மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகளை லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் பட்டியலிட்டார்.

திவாஹர்

Leave a Reply