“இந்தியாவுக்கான பசுமை மாற்றத்தைக் கண்டறிதல்” என்ற தலைப்பில் பருவநிலை மாநாடு 2024, 12 ஜனவரி 2024 அன்று மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்றது. மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப திறன்களைத் திரட்டுவதில் தனியார் துறை, பருவநிலை தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் முக்கியப் பங்கு குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அரசின் முயற்சிகளை மேம்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் சமூகங்களை ஈடுபடுத்துவது மற்றும் புதுமையான பருவநிலை சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
சுற்றுச்சூழல் துறை செயலாளர் லீனா நந்தன், ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த், ஐ.எஃப்.எஸ்.சி.ஏ தலைவர் கே.ராஜாராமன், அமெரிக்க தூதரக ஜெனரல் மைக் ஹாங்கி, கோத்ரேஜ் அக்ரோவெட் தலைவர் மற்றும் கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு நாதிர் கோத்ரெஜ் ஆகியோர் தொடக்க அமர்வில் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லீனா நந்தன், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர நிகழ்வுகளின் உலகளாவிய தாக்கத்தை எடுத்துரைத்தார், உடனடி நடவடிக்கை, திட்டமிடல் மற்றும் நிதி திரட்டலின் அவசியத்தை வலியுறுத்தினார். பசுமைக் கடன் திட்டம் உள்ளிட்ட அமைச்சகத்தின் நடவடிக்கைகளை அவர் விவரித்தார். சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை (எல்.ஐ.எஃப்.இ) நினைவுகூர்ந்த அவர், தகவலறிந்த நுகர்வோர் தேர்வுகளுக்காக ஈகோமார்க் லேபிளிங் என்ற கருத்தாக்கம் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
பருவநிலை நடவடிக்கைக்கு பயோமாஸ் பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மை போன்ற நடவடிக்கைகள் அவசியமானவை என்று வலியுறுத்தப்பட்டது.
திவாஹர்