மார்ஷல் தீவைச் சேர்ந்த எம்.வி.ஜென்கோ பிக்கார்டி கப்பல் ஏடன் கடல் பகுதியில் ஆபத்தில் சிக்கியிருப்பதாகவும், 2024 ஜனவரி 17 அன்று இரவு 11.11 மணிக்கு ட்ரோன் தாக்குதலை அது எதிர்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக உதவி கோரப்பட்டதையடுத்து, அப்பகுதியில் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் கப்பல் விரைவாக குறிப்பிட்ட இடத்திற்கு சென்றது.
2024 ஜனவரி 18 அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு எம்வி ஜென்கோ பிக்கார்டி கப்பல், 22 பணியாளர்களுடன் (அதில் 9 பேர் இந்தியர்கள்) பாதுகாப்பாக மீட்கப்பட்டது. அந்த சம்பவத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. அத்துடன் எம்வி ஜென்கோ பிக்கார்டி கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் கப்பலைச் சேர்ந்த இந்திய கடற்படை நிபுணர்கள் சேதமடைந்த பகுதியை 2024 ஜனவரி 18 அன்று அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டனர். முழுமையான ஆய்வுக்குப் பிறகு, எம்வி ஜென்கோ பிக்கார்டி கப்பல் அடுத்த துறைமுகத்தை நோக்கி செல்கிறது.
திவாஹர்