தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசுக்களை அழிக்க வீடு வீடாக சென்று மருந்துகள், பிளிச்சிங் பவுடர்கள், புகை அடித்தல் போன்ற நடவடிக்கைகளால் கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தெருவாக சென்று கொசுக்கள் உற்பத்தியாகும் தேங்காய் மட்டை. புழைய டயர்கள், தேவையற்ற நீரை அகற்றுதல், உடைந்த சிமிண்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வீட்டில் உள்ள நீர் தொட்டிகளில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் மருந்துகள் தெளிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. வீட்டில் உள்ள பிரிஜ், நீண்டகாலமாக உள்ள நீர்தொட்டிகளை சுத்தம் செய்ய பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் தாங்களாகவே முன் வந்து தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கவிடாமலும், தேவையற்ற உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். தங்கள் விட்டில் மேல் கூரையில் உள்ள நீர்தொட்டிகளை பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு துறைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக மேற்கொண்டு வீடுவீடாக சென்று வீட்டின் உள்ளே, வெளியே உள்ள நீர் நிலைகளை அப்புறப்படுத்தியும், சுகாதாரமான முறையில் மக்கள் வாழ தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வீடியோ வாகனம் மூலம் டெங்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்தும் முன்னனி திரைப்பட நடிகர்கள் பங்கேற்ற குறும்படங்கள் தினசரி 2 கிராமங்கள் விதம் காண்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
02.02.2015 அன்று “கொசுவை ஒழிப்போம், டெங்குவைத் தடுப்போம்” என்ற கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களின் பார்வைக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூந்துகளிலும் ஒட்டும் பணியினை தூத்துக்குடி பழைய பேரூந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் கோபால சுந்தரராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.உமா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், அரசு போக்குவரத்து கோட்ட மேலாளர் ஜெபராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், 02.02.2015 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பணியாளர்களுக்கும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் கொடுக்க வந்த பொது மக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
-பி.கணேசன் @ இசக்கி.