இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் உடல் தகுதி இந்தியா இயக்கம் ‘ஃபிட் இந்தியா சாம்பியன்கள்’ டிஜிட்டல் தொடரை தொடங்கவுள்ளது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான உடல் தகுதி இந்தியா இயக்கம் ‘ஃபிட் இந்தியா சாம்பியன்கள்’ போட்காஸ்ட் டிஜிட்டல் தொடரை அறிமுகம் செய்ய உள்ளது.

டிஜிட்டல் மற்றும் மல்டிமீடியா தொழில்நுட்பத்தின் மூலம் ஆரோக்கியத்தை முன்கூட்டியே நிர்வகிக்கும் உடற்பயிற்சித் துறையில் ஒரு முக்கிய பங்குதாரரான கோக்கி (GOQii) உடன் இணைந்து இது தொடங்கப்படுகிறது.

இந்திய விளையாட்டு வீரர்களின் சிறந்த சாதனைகள் மற்றும் எழுச்சியூட்டும் அம்சங்களைக் கொண்ட ஒரு புதுமையான தொடர், ஜனவரி 27 முதல் தொடங்குகிறது. ஹாங்சோவில் நடந்த 2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் காலால் அம்பெய்தி அறிமுகத்திலேயே தங்கம் வென்ற சாதனையுடன் புயலைக் கிளப்பிய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, தொடக்க அத்தியாயத்தில் இடம்பெறுவார்.

“நான் ஒவ்வொரு நாளும் 6-7 மணி நேரம் பயிற்சி செய்கிறேன், வில்லை வளைப்பதன் மூலம் எனது நாளைத் தொடங்குகிறேன், பின்னர் எனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் போட்டிகளில் விளையாடத் தொடங்குகிறேன். எனது உள் மந்திரம் ‘முயற்சி செய்பவர்கள் ஒருபோதும் தோற்க மாட்டார்கள்’ என்பதாகும். இது போட்டிகளை வெல்ல எனக்கு உதவுகிறது” என்று ஜம்மு வில்வித்தை வீராங்கனை வெளிப்படுத்தினார்.

எஸ் சதிஷ் சர்மா

Leave a Reply