வருடா வருடம் கோடை காலத்தில், ஏற்காடு மலைப்பாதையில் உள்ள வன பகுதிகளில் காட்டு தீ ஏற்படும்.
இந்நிலையில் கோடை காலம் நெருங்கியதால் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அஸ்தம்பட்டி வன சரக அலுவலர் குமார் ஆலோசனையின் பேரில், வன காப்பாளர் நடராஜன் தலைமையிலான குழுவினர் கடந்த 3 தினங்களாக மலைப்பாதையில் சாலை ஓரம் உள்ள காய்ந்த சருகுகள், செடிகளை தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதனால் எளிதில் வன பகுதியில் தீ பற்றாது என்றும், மலைப்பாதையில் உள்ள முனியப்பன் கோவில் வரை இப்பணியை செய்ய போவதாகவும் நடராஜன் கூறினார்.
-நவீன் குமார்.