‘வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த குஜராத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

‘வளர்ச்சியடைந்த பாரதம்  வளர்ச்சியடைந்த குஜராத்’  நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் வீட்டுவசதித் திட்டம் மற்றும் பிற வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் குஜராத் முழுவதும் கட்டப்பட்ட 1.3 லட்சத்துக்கும் அதிகமான  வீடுகளின் பூமி பூஜை மற்றும் தொடக்கவிழாவைப் பிரதமர் தொடங்கி வைத்தார். வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், குஜராத் வளர்ச்சிப் பயணத்துடன் குஜராத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மக்களும் இணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். 20 ஆண்டுகளை நிறைவு செய்த துடிப்புமிக்க குஜராத் நிகழ்ச்சியில் அண்மையில் தாம் பங்கேற்றதை அவர் நினைவுகூர்ந்தார். துடிப்புமிக்க குஜராத் என்ற மாபெரும் முதலீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக குஜராத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

ஏழைகளுக்கு சொந்தமான வீடு என்பது அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஆனால் காலப்போக்கில், குடும்பங்கள் வளரத் தொடங்கியபோது, ஒவ்வொரு ஏழைக்கும் புதிய வீடுகளைக் கட்டுவதற்கான அரசின் முயற்சிகளை வலியுறுத்திய பிரதமர், இன்று மேற்கொள்ளப்பட்ட சுமார் 1.25 லட்சம் பேரின் பூமி பூஜை பற்றியும் குறிப்பிட்டார். இன்று புதிய இல்லம் கிடைத்த அனைத்துக் குடும்பங்களுக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்தினார். “இத்தகைய பணிகள் முடிவடையும் போது, நாடு அதை ‘மோடியின் உத்தரவாதம்’ என்று அழைக்கிறது. இதன் பொருள் உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்பதாகும்” என்று திரு மோடி கூறினார்.

மாநிலத்தில் 180-க்கும் அதிகமான இடங்களில் இத்தனை பேர் கூடியிருந்த இன்றைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். “இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நீங்கள் அளித்துள்ள ஆசீர்வாதங்கள் எங்கள் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. இப்பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நினைவுகூர்ந்த பிரதமர், ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக பயிர் சாகுபடி மற்றும் சொட்டு நீர் பாசனம் போன்ற முன்முயற்சிகள் பனஸ்கந்தா, மெஹ்சானா, அம்பாஜி, படான் ஆகிய பகுதிகளில் விவசாயத்திற்கு உதவியதாக குறிப்பிட்டார். அம்பாஜியில் வளர்ச்சி முயற்சிகள் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். அகமதாபாத் முதல் அபு சாலை வரையிலான அகல ரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே நிலுவையில் உள்ளது என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply