“பள்ளிகளுக்கு கால்பந்து” எனப்படும் “எஃப் 4 எஸ்” திட்டத்தின் கீழ் ஒடிசாவின் 17 மாவட்டங்களில் உள்ள 1260 பள்ளிகளுக்கு 6848 கால்பந்துகள் விநியோகிக்கப்பட்டன – நாடு முழுவதும் 11 லட்சம் கால்பந்துகள் படிப்படியாக விநியோகிக்கப்படும் .

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) மற்றும் சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பான ஃபிஃபா ஆகியவற்றுடன் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைந்து நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக ஃபிஃபா-வின் “பள்ளிகளுக்கு கால்பந்து” (எஃப் 4 எஸ் – Football for Schools) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், பள்ளி அமைப்பில் மாணவர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 9 பிப்ரவரி 2024 அன்று, ஒடிசாவின் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1260 பள்ளிகளுக்கு 6848 கால்பந்துகள் விநியோகிக்கப்பட்டன.

பந்துகளின் விநியோகத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் 2 டிசம்பர் 2023 அன்று ஒடிசாவின் கட்டாக்கில் தொடங்கி வைத்தார். முன்னதாக கல்வி அமைச்சகம், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) மற்றும் சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையே 30 அக்டோபர் 2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்திட்டத்தின் கீழ், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபிஃபா கால்பந்துகள் படிப்படியாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பயனடையும்.

திவாஹர்

Leave a Reply