மும்பை விமான நிலையத்தில் வான்வெளி நெரிசலைக் கையாள அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது .

கொவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், விமானப் போக்குவரத்து மற்றும் வான்வெளி நெரிசலில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை விமான நிலையத்தில், அதன் ஓடுபாதைகளில் நெரிசலால் பாதிக்கப்படுகிறது. இது வான்வெளி நெரிசலுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் விமானங்கள் சுமார் 40 முதல் 60 நிமிடங்கள் வரை விமானங்கள் வானில் வட்டமிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

ஒரு விமானம் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 2000 கிலோ எரிபொருளைப் பயன்படுத்துகிறது.   இதனால் எரிபொருள் செலவு அதிகரிக்கிறது. இது விமான நிலைய செயல்பாடுகளின் திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் இரண்டையும் மோசமாகப் பாதிக்கிறது.

இதில் நெரிசலை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம், விமான வழிசெலுத்தல் சேவை வழங்குநராக இருப்பதால், ஜனவரி 2, 2024 அன்று விமான நிலைய ஆபரேட்டருக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்து, விமான போக்குவரத்து இயக்கங்களை (ATM) கட்டுப்படுத்தியது. வான்வெளி பாதுகாப்பு, செயல்பாட்டுக்கு திறன் மற்றும் பயணிகளின் திருப்தி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்திலிருந்து பறக்கும் போது பயணிகளுக்கு நிறைவான அனுபவம் கிடைப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், விமான நிலைய ஆபரேட்டர்கள் மற்றும் விமான நிறுவனங்களின் தேவைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மத்திய அரசு உணர்ந்து செயல்படுகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply