வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பட்டாசு ஆலைக்கு உரிய விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க அரசு வலியுறுத்த வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

ஜி.கே.வாசன்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கேட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். வெடிவிபத்தில் காலமானவர்கள் குடும்பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பட்டாசு ஆலைகள் உள்ளது. கடந்த வருடமாக பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்துள்ளார்கள். ஆபத்தான தொழிலாக இருந்தாலும் வறுமையின் காரணமாக தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்கள். ஆனால் ஏதாவது கவனக்குறைவோ, தொழில்நுட்ப கோளாரோ ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்படும்போது அநியாயமாக உயிழப்பது ஏழை தொழிலாளர்களே.

பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடந்து ஏற்பட்டு வரும் இந்நிலையில் தமிழக அரசு உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்பீடு அளிப்பதோடு கடமை முடிந்தாக நினைப்பது வருந்ததக்கது. பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பாடாதவாறு முறையான பாதுகாப்பு விதிமுறைகளை அதிகப்படுத்தி பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்.

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அரசு உயர் சிகிச்சசை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி‌.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply