மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, மின்-ஆளுகையில் சிறந்து விளங்குவதற்கான மதிப்புமிக்க தேசிய விருதைப் பெற்றுள்ளது தொடர்பாகவும் சிறந்த நடைமுறைகள் தொடர்பாகவும் காணொலிக் கருத்தரங்குகளை நடத்தியது .

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை (DARPG) தேசிய மின்-ஆளுமை காணொலிக் கருத்தரங்குகளை (NeGW 2023-24) நடத்துகிறது.  இந்த முன்முயற்சி, மின்-ஆளுகையில் சிறந்து விளங்குவதற்கான மதிப்புமிக்க தேசிய விருதைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் விருது பெற்ற தங்கள் முயற்சிகளை முன்வைத்து, இத்துறை கற்றல், பரப்புதல் மற்றும் பிரதிபலித்தல் என்ற நோக்கங்களுடன் காணொலிக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தது.

விருது பெற்றது தொடர்பான  நடைமுறைகளை காட்சிப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அறிவுப் பகிர்வை எளிதாக்கவும் முறையே ஜனவரி 5, 2024 மற்றும் 16 பிப்ரவரி 2024 ஆகிய தேதிகளில் 4-வது மற்றும் 5-வது கருத்தரங்குகளை இத்துறை வெற்றிகரமாக நடத்தியது.

வடகிழக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இணைச் செயலாளர் திரு புனித் யாதவ் தலைமையில் நடைபெற்ற 4-வது தேசிய மின்-ஆளுகை காணொலிக் கருத்தரங்கில், ” மின்-ஆளுகையில் மாவட்ட அளவிலான முன்முயற்சியில் சிறந்து விளங்குதல்” என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த அமர்வு முன்மாதிரியான முயற்சிகளை எடுத்துக் காட்டியது.

நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைச் செயலாளர் திரு வி ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடைபெற்ற 5 வது தேசிய மின்-ஆளுகை காணொலிக் கருத்தரங்கில், “மாநில / யூனியன் பிரதேச அளவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அரசின் செயல்முறை” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டது. இந்த அமர்வு முன்னோடி முயற்சிகளை எடுத்துக்காட்டியது.

இந்த முன்முயற்சிகள் மேம்பட்ட ஆளுகை நடைமுறைகளுக்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் புதுமை மற்றும் செயல்திறனுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. 4 வது மற்றும் 5 வது கருத்தங்குகளில் முதன்மைச் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்பச் செயலாளர்கள், பொது நிர்வாக அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உட்பட நாடு முழுவதும் பல அதிகாரிகள் பங்கேற்றனர். இது டிஜிட்டல் மாற்றத்திற்கான கூட்டு உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply