சென்னை வருமானவரித்துறை கூடுதல் ஆணையரகம் , வரிப்பிடித்தம் சரகம் -3, சென்னை, மற்றும் தொழிமுறை கணக்காளர்கள் மற்றும் வரி ஆலோசகர்கள் சங்கமும் இணைந்து, தொழிமுறை கணக்காளர்கள் மற்றும் வரி ஆலோசகர்கள் நலன் கருதி, வருமானவரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருதரங்கத்தினை 17ந்தேதி சென்னையில் நடத்தினர்.
சிறப்பு விருந்தினரான வருமானவரி துணை ஆணையர் திரு R ராஜாமனோகர், அணிந்துரை வழங்கினார். அவர் தமது உரையில் , அனைத்து உகந்த செலவீனம் செய்யும்பொழுதும், உரிய விகிதத்தில் வருமானவரிப்பிடித்தம் செய்யவேண்டிய அவசியம், வரிப்பிடித்தம் செய்த தொகையினை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்தவேண்டிய கட்டாயம், TDS காலாண்டு படிவம் தாக்கல் செய்யவேண்டிய முக்கியத்துவம், வரிப்பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கவேண்டிய தேவை, இவைகள் குறித்து தெளிவாக விளக்கினார்.
வருமானவரி அலுவலர்கள் திரு L ராஜாராமன், திரு K செந்தில் குமார் & திரு T V ஸ்ரீதர் வருமானவரி சட்டத்தில் இடம்பெற்றுள்ள வரிப்பிடித்தம் செய்யவேண்டிய பிரிவுகளின் சாராம்சத்தை தெளிவாக விளக்கினார். மேலும், வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள் மற்றும் அவர்களின் பொறுப்புகளை பட்டியலிட்டனர். வரிப்பிடித்தம் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என்றால் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை எடுத்துரைத்தனர்.
திவாஹர்