குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1374 புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.204.57 கோடி செலவில் 1374 புதிய வகுப்பறை கட்டடங்கள், ரூ.80.85 கோடி செலவில் 270 துறைக் கட்டடங்கள் -‘பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் நூலகக் கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் ரூ.139.65 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1374 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 80 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 270 கட்டடங்களை திறந்து வைத்து, நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் 139 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார். 

சி.கார்த்திகேயன்

Leave a Reply