ஐ.ஐ.டி சென்னை நடத்திய பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு உச்சி மாநாட்டில் புதுமை கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப மேம்பாட்டு விருதை ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் பெற்றது .

மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும், முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமுமான ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு (ஆர்இசி), ஐஐடி மெட்ராஸ் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு உச்சி மாநாட்டில் ‘இந்தியாவை கட்டமைத்தல் 2047: சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்நுட்பம்  நிகழ்ச்சியில் ‘புதுமை கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப மேம்பாட்டு விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி மெட்ராஸில் 2 மெகாவாட் கூரை சூரிய ஆலையை நிறுவுவதற்கான ஆர்.இ.சி.யின் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சியை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சூரிய ஆலை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.15 மில்லியன் யூனிட் தூய்மை எரிசக்தியை உருவாக்குகிறது, இதனால் ஐஐடி மெட்ராஸ் அதன் கரியமில வாயு வெளியீட்டை குறைக்க உதவுகிறது.

ஆர்.இ.சி சார்பில் செயல் இயக்குநர் (சி.எஸ்.ஆர்) திருமதி தருணா குப்தா, ஆர்.இ.சி., சென்னை மண்டல அலுவலகத்தின் தலைமை திட்ட மேலாளர் திருமதி தாரா ரமேஷ் ஆகியோர் விருதைப் பெற்றுக் கொண்டனர். இந்த விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாக ராஜன், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply