ராயல் நியூசிலாந்து கடற்படையின் கடற்படைத் தலைவர் ஆர்.ஏ.டி.எம் டேவிட் ப்ராக்டர் பிப்ரவரி 19 முதல் 27 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சவுத் பிளாக் புல்வெளியில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. டேவிட் பிராக்டர் 2024 பிப்ரவரி 20, அன்று புதுதில்லியில் இந்திய கடற்படையின் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமாருடன் கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின் போது, பரஸ்பரம் ஈடுபாடுகளை அதிகரித்தல், பயிற்சி பரிமாற்றங்கள் மற்றும் தகவல் பகிர்வு உள்ளிட்ட இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர். விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையின் முதன்மை பயிற்சியான மிலன் 24 இல் ஆர்ஏடிஎம் டேவிட் ப்ராக்டர் பங்கேற்க உள்ளார், மேலும் மேற்கு கடற்படை கட்டளையில் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.
அக்டோபர் 22 இல் சிஎன்எஸ் நியூசிலாந்திற்கு விஜயம் செய்ததிலிருந்து இருதரப்புக்கு இடையேயான கடல்சார் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும், இரு கடற்படைகளின் போர்க்கப்பல்கள் வழக்கமான அழைப்புகளை ஏற்று இருநாடுகளின் துறைமுகங்களுக்கு சென்று வருகின்றன, கடைசியாக செப்டம்பர் 23 அன்று ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் உள்ள துறைமுகங்களுக்கு ஐ.என்.எஸ் கொல்கத்தா மற்றும் ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி கப்பல்கள் சென்றன.
திவாஹர்