இலங்கை சோசலிச குடியரசின் குடிமைப்பணியாளர்களுக்கான 2-வது திறன் மேம்பாட்டு பயிற்சி முசோரியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் இன்று தொடங்கியது. இப்பயிற்சித் திட்டம் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 40 பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.
சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளருமான திரு. வி. ஸ்ரீனிவாஸ், அந்த மையத்தின் செயல்பாட்டு கட்டமைப்பு மற்றும் மையம் உருவாக்கப்பட்டதிலிருந்து அடைந்துள்ள கணிசமான முன்னேற்றம் குறித்து அறிமுகம் செய்தார் .
இணைப் பேராசிரியரும், பாடநெறி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஏ.பி.சிங், நிலம் கையகப்படுத்துதல், நிர்வாகத்தின் மாறிவரும் முன்னுதாரணம், அனைவருக்கும் வீட்டுவசதி: டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், கடலோரப் பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்தும் பேரிடர் மேலாண்மை, பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டம், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை, அரசு மின்னணு சந்தை: நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல், ஆதார் உருவாக்கம்: சிறந்த நிர்வாகத்திற்கான கருவி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சுற்றுப் பொருளாதாரம் மற்றும் தேர்தல் மேலாண்மை போன்றவை குறித்து எடுத்துரைத்தார்.
எம்.பிரபாகரன்