‘பெரிய எண்ணிக்கையிலான புத்தொழில் நிறுவனங்கள்’ இந்தியாவின் வளர்ச்சிக் கதையை பிரதிபலிக்கிறது!-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

‘பெரிய எண்ணிக்கையிலான புத்தொழில் நிறுவனங்கள்’ இந்தியாவின் வளர்ச்சிக் கதையை பிரதிபலிக்கிறது என்று மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்திருந்த ‘பெரிய எண்ணிக்கையிலான புத்தொழில் நிறுவனங்கள்’ நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய அமைச்சர், உணவு, ஜவுளி போன்ற பல்வேறு துறைகளில் சிந்தனைகளுடன் புதுமைகளைப் புகுத்துவதற்கான திறனை புத்தொழில் துறை நிரூபித்துள்ளது என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 57 மாறுபட்ட புத்தொழில் நிறுவனங்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்த நிகழ்வுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாரத் புத்தொழில் சூழல் பதிவு, பெரிய எண்ணிக்கையிலான புத்தொழில் நிறுவனங்களின் இணையதளம், சின்னத்தையும் திரு கோயல் அறிமுகப்படுத்தினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply