மொத்த நிலக்கரிப் பயன்பாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் இறக்குமதி நிலக்கரியின் பங்கு குறைந்துள்ளது .

உலக அளவில் நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள 5-வது பெரிய நாடு இந்தியா. அதே நேரத்தில், வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்ற வகையில், நிலக்கரியைப் பயன்படுத்துவதில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.

மின்துறையில் மட்டும் இறக்குமதி செய்யும் நிலக்கரியின் அளவு 2021-22 முதல் 2023-24 வரை 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இரும்பு தொழிலுக்குத் தேவைப்படும் காக்கிங் நிலக்கரி, உயர் தரமான அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரி ஆகியவை இந்தியாவில் குறைந்த விகிதமே இருப்பதால், இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை உள்ளது.  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2004 முதல் 2014 வரை மொத்த நிலக்கரி உபயோகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் அளவு 13.71 சதவீதம். இந்த அளவு 2014 முதல் 2024 வரை உள்ள காலகட்டத்தில் -2.7 சதவீதமாக குறைந்தது. 

மொத்த நிலக்கரி உபயோகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் பயன்பாடு குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) 21.05 சதவீதமாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் பயன்பாடு, நடப்பு நிதியாண்டில் இதே கால கட்டத்தில் 19.38 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம், ரூ.82,264 கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply